web log free
May 08, 2026

நாளை 15 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (22) 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

காலை 09 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸை, கோட்டே, கடுவலை மாநகர சபை பகுதி, மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபைத் பகுதி, கொடிகாவத்த, முல்லேரியா பிரதேச சபை பகுதி, ரத்மலானை மற்றும் சொய்சாபுர மாடி வீட்டுத் தொகுதி ஆகிய பிரதேசங்களுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd