வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தில் சந்தேக நபர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாரளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
"நான்கு பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தகவல்கள் கிடைத்து வருகிறது. இதில் தொடர்புடைய அனைவரும் 2 முதல் 3 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள். அதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.
அவர் கொலை செய்யப்பட்டதற்கு நாங்கள் வருந்துகிறோம். நேற்று நான் சொன்னேன், இது பாதாள உலகக்குழு நடவடிக்கை. எனினும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களா அல்லது வேறு யாரா என்பது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்." என்றார்.


