இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வட்டிச் செலவு 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டின் (2024) முதல் ஆறு மாதங்களில் ரூ. 1142.1 பில்லியனாக இருந்த அரசாங்கத்தின் மொத்த வட்டிச் செலவு இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் ரூ. 1264.6 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இதில் உள்நாட்டுக் கடனுக்கான வட்டிச் செலுத்துதலின் மதிப்பில் 4.1 சதவீதம் அதிகரிப்பு, கடந்த ஆண்டின் (2024) முதல் ஆறு மாதங்களில் ரூ. 1073.7 பில்லியனில் இருந்து இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் ரூ. 1,117.5 பில்லியனாகவும்,
கடந்த ஆண்டின் (2024) முதல் ஆறு மாதங்களில் ரூ. 68.4 பில்லியனாக இருந்த வெளிநாட்டுக் கடனுக்கான வட்டிச் செலுத்துதலின் மதிப்பு இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் ரூ. 1,117.5 பில்லியனாகவும் அதிகரித்துள்ளது. இது 115.2 சதவீதம் அதிகரித்து 147.1 பில்லியனாக உயர்ந்ததன் காரணமாகும்.


