web log free
May 23, 2026

போதைப்பொருள் ஒழிப்பு வாரம்


இன்று முதல் ஒருவார காலத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கு முன்னிட்டு, நாட்டில் பல்வேறுப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அமுலாகும் கொள்கை, சட்டமுறைமை மற்றும் புனருத்தாபனம் என்ற பிரதான தொனிப்பொருளின் ஊடாக நாடளாவிய ரீதியாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் போதையிலிருந்து விடுதலை பெறுவது குறித்து தெளிவுப்படுத்தல் உள்ளிட்ட பல செயற்திட்டங்கள் இதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd