web log free
November 08, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு!

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற வகையில் நியாயமான சம்பளம் அவசியம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளாந்த சம்பளமாக 1,350 ரூபா வழங்கப்படுகின்றது.  2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அது 1,550 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்மொழிகின்றேன்.

1,550 ரூபா சம்பளத்துக்கு மேலதிமாக அரசாங்கத்தால் வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபா வழங்குவதற்கு முன்மொழியப்படுகின்றது.

தோட்ட நிர்வாகம் 1,550 ரூபா வழங்கும், அரசாங்கம் 200 ரூபா வழங்கும். அந்தவகையில் நாளொன்றுக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா கிடைக்கப்பெறும்.

தோட்டத் தொழிலாளர்கள் 25 நாட்கள் வேலைக்கு வந்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறுகின்றது.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய குத்தகை ஒப்பந்தம் 2042 இல் நிறைவு பெறுகின்றது. முறையாக நிர்வாகிக்கப்படாத பெருந்தோட்டங்கள் மீள பெறப்படும்."

இவ்வாறு வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.  

Last modified on Friday, 07 November 2025 11:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd