web log free
February 05, 2026

பணிப்புறக்கணிப்பு நிறைவு

ரயில் தொழிற்சங்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் இயந்திர சாரதிகள், ஒழுங்குப்படுத்தல், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்துக்கள் இன்று மாலை வழமைக்கு திரும்பும் என ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டாலும், தங்களது கோரிக்கைக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் நள்ளிரவு 12 முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ரயில் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு கூடிய ரயில் தொழிற்சங்கங்கள் இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd