பிரதான இரண்டு காரணங்களின் நிமித்தம் அரசாங்கத்திற்கு எதிரான நுகேகொட எதிர்ப்புப் பேரணியில்,கலந்துகொள்ளப் போவதில்லை என,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் தம்மை பார்வையிட வரும் ஆதரவாளர்கள் மற்றும் தங்காலையிலிருந்து நுகேகொடைக்குச் செல்வதில் ஏற்படும் நேர விரயங்களே அவ்விரண்டு காரணங்களெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாவது; அரசாங்கத்துக்கு எதிராக இம்மாதம் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.
குறித்து தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எனது ஆதரவையும் தெரிவிக்கிறேன்.இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜட் குளிர் நீரைப்போன்றது.போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் நடந்தபோது, அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்தியது.எனினும் தாங்கள் நிரபராதிகள் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இரண்டு காரணங்களே என்னை,நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்போகிறது.
இதனால்,என்னை சிலர் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.எனினும் என்னைச் சந்திக்க வருவோரை நான்,சந்திக்காமலிருக்க விரும்பவில்லை.அவ்வளவு தூரம் சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவும் முடியாது.


