பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
யாராவது, உண்மைக்குப் புறம்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காக சாட்சியங்கள் முன்வைத்தால், தெரிவுக்குழு உறுப்பினர்கள் இணைந்து, அது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.