web log free
January 08, 2026

நுகேகொடையில் இன்று நடக்கப்போவது என்ன?

நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எதிர்க்கட்சி பேரணிக்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நாவல வீதியில் நுகேகொடை மேம்பாலம் அருகே உள்ள ஹைலெவல் (High level ) சந்திலிருந்து திரையரங்கு எதிரே உள்ள நாவல சுற்றுவட்ட பாதை வரை வாகனப் போக்குவரத்து பிற்பகல் 2.00 மணி முதல் பேரணி முடியும் வரை தடை செய்யப்படும்.

வாகன சாரதிகள் சிரமத்தைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SLPP மற்றும் UNP இணைந்து இந்த எதிர்ப்பு பேரணியை ஒழுங்கு செய்துள்ளன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd