உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுவிக்கப்படும் என அதன் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குறித்த தெரிவுக் குழு நாளையதினம் மீண்டும் ஒன்று கூடவுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு இதுவரையில் 7 தடவைகள் ஒன்று கூடிய நிலையில், இதுவரையில் 15 பேர் சாட்சி வழங்கியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியையும் இந்த தெரிவுக் குழுவில் சாட்சி வழங்க அழைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினரும், குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் உறுப்பினருமான சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.