ஒரே ஆண்டுக்குள் ரூ.50,000 கோடியை சேமித்து, பேரிடர் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பகிர்ந்தளித்த ஒரே அரசு தற்போதைய அரசே என பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருப்பதைப் போலவே, அனைத்து அரச ஊழியர்களும் அதே நோக்கத்துடன் செயல்படுவதால், அந்த இலக்கை நிச்சயமாக நனவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய அரசு மிகுந்த வலிமை கொண்டது என்றும், அந்த அரசை எந்தவிதத்திலும் மாற்ற முடியாது என்றும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் வலியுறுத்தினார்.


