web log free
May 08, 2026

இராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கிளிநொச்சி பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் மரணமடைந்த இராணுவத்தின் மருத்துவப் பிரிவினரின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், இராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஐந்து இராணுவத்தினர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களில் இருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிசிக்சைப் பெற்று வந்தவர்களுள் மற்றுமொரு இராணுவ சிப்பாய் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd