தற்போதைய அரசின் கல்விக் கொள்கைகள் மற்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவின் செயல்பாடுகள் குறித்து சீலரதன தேரர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய 6ஆம் வகுப்பு ஆங்கில மொழி பாடத்திட்டத்திற்கான புதிய மொடியூல் மூலம், மாணவர்களிடையே ஒருபால் ஈர்ப்பு (சமலிங்கத்தன்மை) ஊக்குவிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த நடவடிக்கைகள் அப்பாவி குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் செயற்பாடுகளாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமரின் தோற்றம் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சீலரதன தேரர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குழந்தையை பெற்றெடுக்காத ஒருவர், தாய்மையின் அன்பையும் குழந்தையின் பெறுமதியையும் உணர முடியாது என அவர் கூறினார். அதேசமயம், பிரதமருக்கு திருமணத்திற்கான துணையைத் தேடித் தரத் தயாராக இருப்பதாகவும் அவர் கிண்டலாக குறிப்பிட்டார்.
நாட்டின் கல்வி அமைப்பு மேலும் அழிவடையாமல் தடுக்க, கல்வி அமைச்சை உடனடியாக ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் சீலரதன தேரர் வலியுறுத்தினார்.
மேலும், தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தற்போது கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகி வருவது குறித்து தனது கவலையை வெளியிட்டார். அவர்கள் தாங்களே இந்த நிலைமை உருவாக காரணமாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


