எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் திருத்தப்படுள்ளது.
ஒட்டோ டீசல் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.279 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.323 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 95 ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.340 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.182 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது .
பெட்ரோல் ஒக்டேன் 92 விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளை திருத்துவதாக LIOC நிறுவனமும் தெரிவித்துள்ளது.


