கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் பரிசோதகர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி எதிர்வரும் 08ஆம் திகதியுடன் முடிவடையும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளம் மூலம் இணைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 25, முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைகள், 2026 பெப்ரவரி 17 - 26 வரை நடத்தப்படவுள்ளது.


