அரகலய (போராட்ட) காலத்தில் மக்கள் கோரிய முழுமையான System Change நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னர் பாராளுமன்றத்தில் சுமார் மூன்று ஆசனங்களையே கொண்டிருந்த தேசிய மக்கள் சக்திக்கு (NPP) மக்கள் 159 ஆசனங்களை வழங்கியமை மிகப் பெரிய அரசியல் மாற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டு முறை ஆயுதப் போராட்டங்கள் மூலம் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற ஒரு அரசியல் இயக்கத்திற்கு, ஜனநாயகத் தேர்தல் வழியாக அதிகாரம் கிடைத்துள்ளமை கூட ஒரு வகையில் System Change-இன் ஆரம்பமாகக் கருதப்படலாம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.


