தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து ஆரம்பித்திருந்த தொடர்ச்சியான சத்தியாகிரகப் போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
6ஆம் வகுப்பிற்கு தொடர்பான புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைத்துள்ளதாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவංசர் இந்த சத்தியாகிரகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, இந்த சத்தியாகிரகப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


