web log free
May 23, 2026

சந்தர்ப்பம் வழங்குமாறு பொதுபல சேனா கோரிக்கை

ஏப்ரல்21 தாக்குதல் குறித்த விசாரணைக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்குவதற்கு தமக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, பொதுபல சேனா கோரியுள்ளது.

அந்த அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் நாளை ஒன்று கூடுகிறது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் சாட்சி வழங்கவுள்ளதுடன், அமைச்சர் அப்துல் ஹாலிமின் சகோதரரான பாயிம் எம். ஹசீமும் அழைக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd