தரமற்ற பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிப்பு
தரமற்ற பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய அபராத தொகைகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவிக்கையில், திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் சட்ட மசோதாவின் மூலம் அதற்கான விதிமுறைகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
மேலும், தற்போது தரமற்ற பிளாஸ்டிக் தொடர்பாக விதிக்கப்படும் அபராதம் ரூ. 10,000 ஆக இருப்பதாகவும் துணை அமைச்சர் குறிப்பிட்டார்.


