வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக்குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வடக்கு மாகாணத்தினை அண்மித்து நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மிதமான (சில இடங்களில்) மற்றும் சற்று கனமான ( சில இடங்களில்) மழை எதிர்வரும் 27.01.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக இன்றும்(24.01.2026) நாளையும்(25.01.2026) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை ஈரப்பதன் நிறைந்த கீழைக்காற்றின் வருகை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள நிலவிய வரண்ட காற்றின் செல்வாக்கு குறைவடைந்து குளிர் நிலைமை சற்று சீரடைந்துள்ளது.
ஆனால் மீண்டும் எதிர்வரும் 27.01.2026 முதல் குளிரான வானிலை நிலவத் தொடங்கும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்வரும் 27.01.2026 வரை தமது செயற்பாடுகளைத் தவிர்ப்பது சிறந்தது.


