தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் விரைவில் வீழ்ச்சி அடைந்து, மீண்டும் தங்களுக்கு பிடித்த பழைய ஆட்சிமுறைக்கு நாடு திரும்பும் வரை சிலர் காத்திருக்கிறார்கள் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாப்பலகம தெரிவித்துள்ளார்.
சமூகம் எப்போதும் முன்னேற்றத்தை நோக்கி மட்டுமே நகரும்; பின்னோக்கி செல்லாது என்றும் அவர் கூறினார்.
கல்லுயுகம், மேய்ப்பர் யுகம், விவசாய யுகம், தொழில்துறை யுகம் ஆகியவற்றை கடந்து இன்று கணினி யுகத்தை அடைந்துள்ள சமூகமானது, மீண்டும் தொழில்துறை யுகம் அல்லது விவசாய யுகம் வழியாக மேய்ப்பர் யுகத்திற்கு திரும்பாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தோல்வியடைந்து தேங்காய் உடைத்துக்கொண்டு வெளிநாடுகளில் தங்கியிருந்து கற்பனை ஜனாதிபதி பதவிகளை கனவு காணும் நபர்கள், அந்த கனவுகளை நிரந்தரமாகவே காண வேண்டிய நிலை உருவாகும் எனவும் ருவன் மாப்பலகம வலியுறுத்தினார்.
தெரண வாதபிடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


