web log free
February 02, 2026

இனம், பண்பாட்டுக்கு எதிரான ஆட்சிக்கு தேரர்கள் எதிப்பு

ஜனாதிபதி மலர்மாலை ஏந்தி மல்வத்து–அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்து தொலைக்காட்சியில் தாம் புத்தமதஸ்தர் எனத் தெரிவிப்பதற்குப் பதிலாக, தமது அமைச்சர்களுக்கு நாட்டின் வரலாற்றை கற்பித்து ஒழுக்கத்தை உருவாக்க வேண்டும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் பேராசிரியர் தம்பர அமில தேரர் கூறினார்.

அமைச்சர் லால் காந்த அரசியல் பேசும் போது கசாயம் பொருந்தாது என்று கூறியதைப் போல, தமக்குப் பதவிகள் பொருந்தாது என்றும், வரலாற்றில் கூட அரசர்களை சங்கம் கண்டித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.

இனம் மற்றும் பண்பாட்டுக்கு எதிரான ‘காலிங்க மக’ போன்று உள்ள ஆட்சிமுறைக்கு எதிராக, இனி வருங்காலத்தில் அனைத்து நிகாயங்களையும் தாண்டி மஹா சங்கம் ஒன்றிணையும் என்றும் அவர் தெரிவித்தார்.

மிஹிந்தலே ராஜமகா விஹாரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது தம்பர அமில தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd