web log free
June 19, 2026

மின்சார கட்டணத்தை 30% குறைக்க நடவடிக்கை

வாக்குறுதியின்படி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணத்தை 30% குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார மற்றும் ஆற்றல் அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நேற்று (06) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலே அவர், ஒரு மின்அலகு உற்பத்தி செய்யும் சராசரி செலவை ரூ.37 இலிருந்து ரூ.29 வரை குறைக்க முடிந்துள்ளதாக கூறினார்.

“மின்அலகு ஒன்றின் உற்பத்தி செலவை குறைக்காமல் மின்சார கட்டணத்தை குறைக்க முடியாது. இதுவரை அதிக விலையில் வாங்கி குறைந்த விலையில் விற்பனை செய்த நிலை இருந்தது. நாம் பொறுப்பேற்ற போது உற்பத்தி செலவு ரூ.37 ஆக இருந்தது. தற்போது அதை ரூ.29 ஆக, அதாவது 22% வரை குறைத்துள்ளோம். எங்கள் திட்டம் அதை ரூ.25 வரை குறைப்பதாகும். அதைச் சாதித்த பிறகு, மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணத்தை 30% குறைப்போம்” என அமைச்சர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd