எதிர்க்கட்சியின் பிரதான நோக்கம் பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் அரசையும் தாங்கள் செய்த தவறுகளைச் செய்த குழுவாக சமூகத்தில் ஒரு கருத்தை உருவாக்குவது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் செய்த தவறுகளை திருத்தி மக்கள் முன்னிலையில் நல்லவர்களாக நிற்பதற்கு பதிலாக, பொய்களை கூறி அரசையும் ஊழல் மற்றும் தவறுகள் செய்தவர்களாக சித்தரிக்க எதிர்க்கட்சி முழு ஆண்டும் முயற்சி செய்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக நாட்டில் பல்வேறு ஆட்சிகளை மக்கள் அனுபவித்துள்ளதால், “அரசியல்வாதிகள் என்றால் திருடன், பொய் பேசுபவர், உறவினர்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்” என்ற பொதுவான எண்ணம் சமூகத்தில் நிலவுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசையும் அதேபோன்றதாக காட்ட முயற்சி நடைபெறுகிறது எனவும் அவர் கூறினார்.
எனினும், தமது கட்சி இவ்வாறான செயல்களில் ஈடுபடாத, தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் கட்சியாக இருப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


