web log free
April 03, 2026

வஸ்கடுவாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

வஸ்கடுவா வாடியமண்டக பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் வஸ்கடுவா பகுதியைச் சேர்ந்த எஸ். புஷ்குமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd