web log free
April 21, 2026

சூடு பிடிக்கும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்! சுரேஷ் சலே கைது

முன்னாள் மாநில புலனாய்வு பிரிவு தலைவரும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு துறை (CID) அவரை கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த தாக்குதல் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd