2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026 ஜனவரி மாதத்தில் தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட வாகன இறக்குமதி அமெரிக்க டொலர் 224 மில்லியன் வரை குறைந்துள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் அமெரிக்க டொலர் 301 மில்லியனாக பதிவாகியிருந்தது.
2026 ஜனவரி மாதத்தில் சுற்றுலா வருகைகள் வருடாந்திர அடிப்படையில் உயர்ந்து, 2025 ஆம் ஆண்டு பதிவான மாதாந்திர மட்டத்தையும் மீறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 2026 ஜனவரி மாதத்திற்கான சுற்றுலா வருவாய் அமெரிக்க டொலர் 378 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரியில் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் (remittances) அமெரிக்க டொலர் 751 மில்லியனாக இருந்ததுடன், இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 31.1 சதவீதத்திற்கான குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகிறது.
2026 ஜனவரி மாதத்தில் அரசுத் திறைச்சீட்டு சந்தைக்கு வெளிநாட்டு முதலீடுகள் அமெரிக்க டொலர் 17 மில்லியன் நிகர வருகையை பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகள் உட்பட CSEஇல் 2026 ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு முதலீடுகள் அமெரிக்க டொலர் 22 மில்லியன் நிகர வெளியேற்றத்தை பதிவு செய்துள்ளன.
மேலும் சீனா வங்கி (PBOC) உடனான பரிமாற்ற வசதி (swap facility) உட்பட மொத்த உத்தியோகபூர்வ கையிருப்புகள் (GOR) 2026 ஜனவரி மாத இறுதியில் அமெரிக்க டொலர் 6.8 பில்லியனாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



