2026 ஆம் ஆண்டின் இதுவரை காலப்பகுதியில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள தரவுகளின்படி 13,416 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
சமூக மருத்துவ நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்ததாவது, இவ்வருடத்தில் இதுவரை 4 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.
கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் அதிகளவில் டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், காலி, மாத்தறை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களிலும் நோய்த்தாக்கம் காணப்படுகின்றது.
மேலும், காய்ச்சல் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.



