காலி கடற்பரப்பிலிருந்து 40 மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தேடல் மற்றும் மீட்புப் பகுதிக்குள் இந்த சம்பவம் நடந்ததால், கப்பலில் இருந்த பணியாளர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை, விமான படையினர் ஈடுபட்டனர்.



