web log free
April 29, 2026

சீனி வரி விரைவில் அறிமுகம்

இனிப்புச் சுவைக்குப் பதிலாக மாற்று உணவுகளைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சீனி வரி (Sugar Tax) மீண்டும் அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் துணை பணிப்பாளர் நாயகம் (பல் சேவைகள்) சிறப்பு வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க வருடத்திற்கு சுமார் 10 கிலோ கிராம் சர்க்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனால் இலங்கையில் ஒருவர் வருடத்திற்கு சுமார் 34 கிலோ கிராம் சர்க்கரை பயன்படுத்துகின்றனர் என தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் 5வது தேசிய வாய்ச் சுகாதார ஆய்வு தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பு வைத்தியர் சந்தன கஜநாயக்க இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd