web log free
May 03, 2026

மீண்டும் QR யுகம்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோக பாதைகள் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவதும், நாட்டில் எரிபொருள் தேவையும் அசாதாரணமாக அதிகரித்து வருவதும் காரணமாக நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் மீண்டும் QR குறியீட்டு முறையை அமல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று (15) காலை 6.00 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படுவதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இன்று காலை 6.00 மணி முதல் QR குறியீடு இல்லாமல் எந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தும் எரிபொருள் வழங்கப்படமாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

QR குறியீட்டை பெறும் முறை:

1. முன்பு QR குறியீட்டிற்கு பதிவு செய்தவர்கள்:

i. வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி எண் மாற்றமில்லையெனில் (14) ஆம் திகதி நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ இணையதளத்தில் இருந்து தங்களுக்கான QR குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

ii. வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி எண் மாற்றம் ஏற்பட்டிருந்தால் (15) ஆம் திகதி காலை 6.00 மணி முதல் அதே இணையதளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

2. முன்பு QR குறியீட்டிற்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தில் (RMV) புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்:

i. 2026.03.15 காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

QR முறைப்படி வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு:

  • பேருந்து – 60 லிட்டர்
  • மோட்டார் சைக்கிள் – 5 லிட்டர்
  • வேன் – 40 லிட்டர்
  • கார் – 15 லிட்டர்
  • லொறி – 200 லிட்டர்
  • நில வாகனம் – 25 லிட்டர்
  • முச்சக்கர வண்டி – 15 லிட்டர்
  • சிறப்பு பயன்பாட்டு வாகனம் – 40 லிட்டர்
  • குவாட்ரிசைக்கிள் – 5 லிட்டர்

அதேபோல் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் பொறுப்பை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொள்ளும் என்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd