web log free
April 25, 2024

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

குருதுகஹஹெடேக்ம - அனுருத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் மீது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.