web log free
March 18, 2026

ஜனாதிபதியின் வாக்குறுதி ஒரு வாரத்தில் மீறல்

நாட்டில் இரண்டு மாதங்களுக்கு எரிசக்தி பிரச்சினை உருவாக விடமாட்டோம் என ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி, ஒரு வாரத்திற்குள் மீறப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த வாரம் நடைபெற்ற இளைஞர் தொழில்முனைவோரின் வர்த்தக சம்மேளனத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, தனது உரையின் போது இரண்டு முறை நாட்டில் இரண்டு மாதங்களுக்கு எரிசக்தி பிரச்சினை ஏற்படாது என உறுதியளித்தார்.

மேலும், இடையறாத எரிசக்தி வழங்கலை உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும், அந்த வாக்குறுதி ஒரு வாரத்திற்குள் மீறப்பட்டிருப்பது, நாட்டின் தொழில்முனைவோர் மற்றும் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து அரசுக்கு போதிய புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது என அவர் விமர்சித்தார்.

இந்த நிலைமை தொழில்முனைவோருக்கு சவாலாக மாறியுள்ளதாகவும், இது கவலைக்குரிய சூழ்நிலையாக இருப்பதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd