web log free
May 07, 2026

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலை உயர்வு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் நேற்று (22) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தமது எரிபொருள் விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 382 ரூபாவாகும். 

அத்துடன், ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் புதிய விலை 572 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலை 398 ரூபாவாகவும், ஒரு லீற்றர் 95 ரக பெற்றோலின் விலை 487 ரூபாய் வரையிலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd