மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவிப்பின் படி, முச்சக்கரவண்டி கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய கட்டண விவரம்:
• முதல் 1 கி.மீ – ரூ. 110 (ரூ. 10 அதிகரிப்பு)
• அடுத்த ஒவ்வொரு கி.மீ – ரூ. 90 (ரூ. 5 அதிகரிப்பு)
எரிபொருள் விலை உயர்வு மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதையே காரணமாகக் கொண்டு இந்த கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




