web log free
May 14, 2026

நாடு கடத்தப்பட்ட மிதிகம சூட்டியிடம் CID விசாரணை

இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த முக்கிய நபரான பிரபாத் மதுசங்க என்ற மிதிகம சூட்டி இன்று (30) அதிகாலை ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

சர்வதேச பொலிஸாரால் 'சிவப்பு அறிவித்தல்' பிறப்பிக்கப்பட்டிருந்த இவர், ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இவரைக் பொறுப்பேற்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மூன்று அதிகாரிகள் ஓமானுக்குச் சென்றிருந்தனர்.

அதிகாரிகளுடன் இன்று அதிகாலை 4.27 மணிக்கு ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து சலாம் எயார் (OV-437) விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.

இலங்கையில் இருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் ஓமானில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேகநபரைக் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd