web log free
May 17, 2026

மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை

இன்று (02) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய ஏற்ற வானிலை நிலை காணப்படுகின்றது.

மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட பலத்த மழை பதிவாகலாம்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை நேரங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடியதால், அவை காரணமாக ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd