கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்
தொலைக்காட்சி விவாதமொன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கூறுகையில்,
“ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை சிறிலங்கா பொதுஜன பெரமுன எனக்கு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ச இல்லாவிடின், மீண்டும் அந்தக் கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன். ஓகஸ்ட் 11 ஆம் திகதி பெயரிடவுள்ள வேட்பாளரை நான் எதிர்க்கிறேன்.
நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும், சிறிலங்கா ஜனாதிபதியின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான உரிமை உள்ளது.
தேசிய உடை அணிபவரே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நானும் கூட தகுதியானவன் தான். அதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்புகிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.