web log free
May 20, 2026

தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று (04) காலை 8.00 மணி முதல் மீண்டும் ஒருமுறை நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. 

இந்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவடையும் காலம் குறித்து இன்று நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

வைத்தியர்களின் இடமாற்றச் செயற்பாடுகளை அரசியல்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த வாரத்திற்குள் இரண்டு சந்தர்ப்பங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது. 

தங்களது தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அதிகாரிகளின் எதிர்மறையான பதில்களைக் கருத்திற்கொண்டு, மீண்டும் இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்ததாக உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd