web log free
May 25, 2026

புதிய பஸ் நிலையம் திறப்பு

கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு இன்று (08) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இதில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டமானது, பொதுமக்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

இதன் முதற்கட்டத்தின் கீழ், பேருந்து நிலையக் கட்டடங்களைப் புனரமைத்தல், புதிய தகவல் மையமொன்றை நிறுவுதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுப்புறங்களை அழகுபடுத்துதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை விமானப்படை தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd