web log free
May 30, 2026

இனிப்புப் பலகாரங்களின் விலை அதிகரிப்பு

எரிவாயு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக சித்திரை புத்தாண்டு காலத்துக்கான இனிப்புப் பலகாரங்களின் விலைகள் கணிசமானளவு அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்மி 180 ரூபா முதல் 200 ரூபா, கொண்டை கெவுன் 90 ரூபா முதல் 100 ரூபாவரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஜாங்கிரி 100 ரூபாவாகவும் பயத்தம் பலகாரம் 80 ரூபாவாகவும் கொக்கிஸ் (அச்சு முறுக்கு) 40 ரூபாவாகவும் அலுவா 70 ரூபாவாகவும் அதிரசம் 80 ரூபாவாகவும் தேங்காய் மிட்டாய் 20 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனிப்புப் பலகார உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 700 ரூபா முதல் 750 ரூபாவரை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அத்துடன் கேக் வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. சந்தையில் தற்போது ஒரு கிலோ கிராம் பட்டர் கேக் (Butter Cake) 1,000 ரூபா முதல் 1,200 ரூபா வரையான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd