web log free
April 12, 2026

இலங்கையில் 41.8% மக்கள் திருமணம் ஆகாதவர்கள்

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 41.8 சதவீதம் பேர் திருமணம் ஆகாதவர்களாக உள்ளனர் என்று இலங்கை புள்ளி விபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை மக்கள் தொகை மற்றும் சமூக புள்ளிவிவரப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சாந்தனி விஜேபண்டார வெளியிட்டார். 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பின் மூலம் இந்த விவரம் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது திருமணம் ஆகாதவர்களின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு, இலங்கையில் முதியோர் மக்கள் தொகையும் அதிகரித்து வருவது கவனிக்கப்படுகின்ற முக்கியமான மாற்றமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd