web log free
April 24, 2026

வாகன உரிமையாளர் பெயருடன் பதிவு இலக்கத் தகடு

வாகன உரிமையாளரின் பெயரை குறிப்பிடும் வகையில் பதிவு இலக்கத் தகடு வழங்கும் முறையை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக மோட்டார் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

புதிய வாகனங்களுக்கு நிலையான பதிவு இலக்கத் தகடு இந்த ஆண்டு மே மாத இறுதியிலிருந்து வழங்க முடியும் என்றும் அந்த துறை குறிப்பிட்டுள்ளது.

அரசின் நிதி தொடர்பான குழுவிற்கு மோட்டார் போக்குவரத்து துறை அதிகாரிகள் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

வாகன உரிமையாளரின் பெயருடன்  பதிவு இலக்கத் தகடு  வழங்குவது குறித்து மோட்டார் போக்குவரத்து துறையின் ஆணையாளர் பிரியந்த திசாநாயக்க கூறியதாவது:

“முடியும் சர். அதை நாங்கள் செய்ய முடியும். உண்மையில் அந்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். சிஸ்டத்தை அப்டேட் செய்த உடன், இப்படியான ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்க எதிர்பார்க்கிறோம்.”

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd