web log free
June 16, 2026

போதை பொருள் கடத்தி சிக்கிய பிக்குகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய விசேட சோதனையில் சுமார் 110 கிலோ ‘குஷ்’ மற்றும் ‘ஹஷிஷ்’ கைப்பற்றப்பட்டது.

பயணப் பொதிகளில் மறைவு அறைகள் அமைத்து, பாடசாலை பொருட்கள் மற்றும் இனிப்புகளுக்குள் போதைப்பொருட்கள் மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 அன்று தாய்லாந்தின் பாங்கொக் நகருக்குச் சென்றிருந்தனர். வெளிநாட்டில் தங்கியிருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களது கைபேசிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன.

இவர்கள் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த உயர்கல்வி பயிலும் இளம் பிக்குகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விமான நிலைய வரலாற்றில் இத்தகைய பெரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றலும், பிக்குகள் குழு தொடர்பான கைது நடவடிக்கையும் முதன்முறையாக பதிவாகியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd