web log free
April 05, 2026

9 மணித்தியால நீர்வெட்டு

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் 9 மணிநேர நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

பத்தேகம, ஹல்பதொட்ட, சந்தரவல, கனேகம, மஹகொட, நாகொட, மீ வெடும, கோனபீனுவல, தெல்வத்த, களுப்பே மற்றும் ஹிக்கடுவ ஆகிய நகரங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd