web log free
June 25, 2026

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுதல்

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பொதுமக்களும் உயரதிகாரிகளும் மிகுந்த பாதுகாப்பின்மை மற்றும் மனஅழுத்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சலே போன்ற ஒருவருக்குக் கூட தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளரின் மரணம் உள்ளிட்ட சமீபத்தில் பதிவான சம்பவங்கள் குறித்து சமூகத்தில் கடுமையான சந்தேக நிலை நிலவுவதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஒரு நபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதற்காக மட்டுமே அவர் தற்கொலை செய்ய முனைவதில்லை என்றும், சட்டம் நியாயமாகவும் சரியான முறையிலும் செயல்பட்டால் விசாரணைகள் நடைபெறும் காலத்தில் தற்கொலை சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காக நபர்களை வேட்டையாட முயற்சிக்கிறது என்றும், இத்தகைய சூழ்நிலையில் சுரேஷ் சலே போன்ற ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டாலும் அதன் பின்னர் அவருக்கு என்ன நடைபெறும் என்பது குறித்து கடுமையான சந்தேகம் நிலவுகிறது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd