நிலவும் மோசமான வானிலை காரணமாக அவசர நிலை ஏற்பட்டால் அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் குழு கேப்டன் நலின் வெவகும்புர தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் அல்லது அனர்த்த நிலைமைகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அறிவித்தால், அதற்கு உடனடியாக பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்காக 412 மற்றும் 212 வகை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




