web log free
June 29, 2026

அடுத்த தலைமுறைக்கு தலைமை வழங்கக் கூடியவர் நாமல்

 

புதிய தலைமுறையின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பொருளாதார சவால்களுக்கும் தலைமை வழங்கக்கூடிய நபர் நாமல் ராஜபக்ச என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். 

இன்று கிராம மட்டத்தில் மட்டுமல்லாமல், சிறைச்சாலைகளுக்குள் கூட அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷவே என்ற பேச்சு நிலவி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், நாட்டின் மக்களுக்காக அதிக அளவில் பணியாற்றியதும், நாட்டின் அபிவிருத்திக்காக செயற்பட்டதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரை தோற்கடிக்காமல் இருந்திருந்தால் நாடு தற்போதைய நிலையை விட மிகவும் முன்னேறியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

எனவே, நாட்டை அபிவிருத்தி செய்யவும், மகிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய மாற்றத்தை மீண்டும் கொண்டு வரவும் கூடிய தலைவர் நாமல் ராஜபக்ஷவே என்றும் அவர் தெரிவித்தார்.

கெஸ்பேவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றை அணுகியபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd