web log free
May 07, 2026

பொலிஸ்மா அதிபர் வைத்தியசாலையில் அனுமதி

 

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் நாரஹேன்பிட்டியவில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருவரையும் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்கள் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd