web log free
May 25, 2026

திடீரென அதிகரிக்கும் மூளை காய்ச்சல!

மெனிஞ்ஜைட்டிஸ் எனப்படும் மூளை காய்ச்சல் நோய் சில பகுதிகளில் பதிவாகி வருவதாக தொற்றுநோய் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். 

அதன்படி, தீயதலாவ பகுதியில் 28 நோயாளிகளும், வெளிமட பகுதியில் 13 நோயாளிகளும், ரிகிலகஸ்கட பகுதியில் 25 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடர்ச்சியான மழைக்கால நிலைமை மற்றும் எதிர்வரும் வெசாக் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகள் காரணமாக இந்த நோய் மேலும் பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd